Sunday, November 3, 2013

கீதாஞ்சலி ---XXXVII { 38 }
&
" நீ வேண்டும் ... நீயேதான் வேண்டும் ''--
இதனையே என் இதயம் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கட்டும் .
அல்லும் பகலும் எனைத் திசை திருப்பும் அனைத்து ஆசைகளும் உட்கூடற்றதும் பொய்மையும் ஆகும் .
 
இரவு தன் இருளில் ஒளியின் வேண்டுகோளை மறைத்திருக்கிறது  ;
அதுபோலவே என் உள்ளுணர்வு இன்மையின்  ஆழத்திலும் கூட
"நீ வேண்டும் ...நீயேதான் வேண்டும் " எனும் ஓலம் வளையமிடுகிறது .
 
புயல் அமைதியின் மீதாய் தன் முழு சக்தி கொண்டு தாக்குகிறது ;
இருப்பினும் அதன் முடிவில் அமைதியையே தேடுகிறது --
அதுபோலவே எனது எழுச்சிக் கலகங்கள் உன் பாசத்தின் மீது தாக்கினாலும்
அதன் ஓலம் இன்னமும் , " நீ வேண்டும் ...நீயேதான் வேண்டும் " என்பதேயாகும்.
 
---ரபீந்தரநாத் தாகூர் .
[ தமிழ் ஆக்கம் --சந்திர கலாதர் சுந்தரம்
03.11.2013 / ஞாயிறு / ஐப்பசி 17/  மாலை 6 மணி
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
 GEITANJALI -XXXVII--38
&
that I want thee , only thee --let my heart repeat without end .
all desires that distract me , day and night , are false  and empty to the core .
 
as the night keeps hidden in its gloom the petition for light 
even thus in the depth of my unconsciousness rings the cry --
' I want thee , only thee '.
 
as the storm still seeks its end in peace when it strikes against peace
with all its might , even thus my rebellion strikes against thy love
and still its cry is --.' I want thee , only thee '
 
--RABINDRANATH TAGORE .     

Friday, November 1, 2013

இப்போது ஷேக்ஸ்பியர் 
&
என் உரையாய் :--
 
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பற்றித்தான் பலர் அறிந்தது ...ஆனால் அவரின் கவிதைகள் மிக உன்னதமானவை ..மிக ஊன்றிப் படித்தால் ஜீவநதிபோல் இனிமை பெருக்கிடும் ..அவரது 14 வரிக் கவிதைகள்  மிக அழகானவை ;  '  சொன்னெட்  ' என்று கவிதை ஒழுங்கில் அமைக்கப் பட்டவை .
இக்கவிதை :--
ஒரு அழகிய வாலிபனை நோக்கி ஒருவர் அறிவுரை கூறுவதாய் அமைந்த ஒன்று .
அவனை திருமணம் செய்துகொண்டு அவனில் திகழும் அழகை இவ்வுலகில் தொடர்ந்து நிலை நிறுத்துமாறு ...அது அவன் தன் நிறைவால்..தன்னலத்தால் ...அவன் கருமித்தனத்தால் அவனோடு அவன் பின் அழகு மறைந்து போய்விடலாகாது ..சந்ததிகள் தொடர்ந்து உலகை மகிழ்வூட்ட வேண்டும் என்கிறார்
இளமூடனே ..உலகின் மீது கருணை கொள் என்கிறார் .
 
&  
 
விளக்க உரை :-
அழகின் அழகுகள் மக்கட்பேறு அடைந்து அவர்களின் அழகு சந்ததிகள் தொடர்ந்து பாராட்டப்பட  வேண்டும் என்று நாம் விழைகிறோம் .
அவன் மரணம் அடைந்தபின் அவனது இளவல்  அவனது  முன்னோரின் அழகின் பதிப்பாய் இருக்கும் அல்லவா ?
ஆனால் நீ...உன் அழகின்மீதே வெறியாய் , தன்னலமாய் உன் அழகின் தீக்கொழுந்துகளையே அணைக்கத் துணிந்து விடுகிறாய்
இவ்வுலகினை உன் செயலால் அழகின் பெருக்கை இழக்கச் செய்கிறாய்
நீயே உன் எதிரி ஆகிறாய்
நீ திருமணம் செய்து அழகை நிலைப்படுத்தாது உன் இனிய அழகிற்கே நீ கொடுமை புரிகிறாய்
நீ இவ்வுலகின் புத்தாபரணம் ...உலகின் வண்ணங்கள் செழுமிய வசந்த வருகையை அறிவிக்க வேண்டியவனாய் இருக்கும் நீயே ,உன் விழிகளுள் உன் அழகைப் புதைத்து கொள்வதும் ,தன்னலத்தால் அதை வீணாக்குதலும் முறையோ ?
எனவே உலகின் மீது கருணை கொண்டு திருமணம் செய்து மக்கட்பேறு அடை 
இல்லாவிடில் பேராசை கொண்டவனாய் இவ்வுலகிற்கு உரியதையும்  இடுகாட்டுடன் இணைந்து நீ தின்றுவிடு .
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@   
 
அழகு தன்மிகையாதல் வேண்டும்
&
அழகின் அழகிய படைப்புகள் அனைத்தும்
தொடர்மிகையாதலே நாம் விழைகிறோம் 
அதனால் அழகின் ரோஜா
என்றும் இறவாநிலை பெரும் அன்றோ --
கால நடையில்  ஒருவன் 
முதிர்வில்  மறைகையில் 
அவன் இளவல்  அவன் பதிப்பாய் இலங்கும் அன்றோ
ஆனால் நீயோ
உன் ஒளிர் விழிகளோடு ஒப்பந்தம் கொண்டனை -
தன்னலப் பெருக்கு ஊட்டி 
உன் ஒளிநாவினை அணைக்கிறாய்
வளம் கொழிக்கையில் பஞ்சம் படைக்கிறாய்
உனக்கு நீயே எதிரி ஆகிறாய் ;
இனிய ' தன்னையே ' மிகக்  கொடுமை செய்கிறாய்
உலகின் புத்தணியாய் நீ இதோ இருக்கிறாய் 
வண்ண வசந்தவருகை  முழக்கிட 
 நீ ஒருவனே இருக்கிறாய்
ஆனால் நீயோ உன் மொட்டினுள்ளேயே
உன் எழில்யௌவனம்  புதைக்கிறாய்  
இள மூட ! கஞ்சத்தனம் கொண்டு 
அழகு பாழ் செய்கிறாய்  
இரக்கம் காட்டுவாய்  இவ்வுலகின்மீது  -
அல்லது பேராசைக்காரனாய் உலகின் பங்கினை
இடுகாட்டுடன் இணைந்து கவர்ந்து உண்ணுவாய்  .
 
---வில்லியம் ஷேக்ஸ்பியர்
' சொன்னெட்' எனும் 14 வரிக் கவிதை ' 
 
[தமிழ் வடிவம் ---சந்திர கலாதர் ]
வெள்ளி / ஐப்பசி / நண்பகல்
 

Sonnet 1
From fairest creatures we desire increase,
That thereby beauty's rose might never die,
But as the riper should by time decease,
His tender heir might bear his memory:
But thou, contracted to thine own bright eyes,
Feed'st thy light's flame with self-substantial fuel,
Making a famine where abundance lies,
Thy self thy foe, to thy sweet self too cruel.
Thou that art now the world's fresh ornament,
And only herald to the gaudy spring,
Within thine own bud buriest thy content,
And, tender churl, mak'st waste in niggarding.
    Pity the world, or else this glutton be,
    To eat the world's due, by the grave and thee.
–William Shakespeare

--

Wednesday, October 30, 2013

[திருத்தி அமைக்கப்பட்ட வடிவம் ]
 
பொன்மலர்கள் [ ' டப்போடில்ஸ் ' ]
 
&
 
தாழ்நிலங்கள்  மலைகள் மீதாய் 
உயர் மிதக்கும் ஒரு மேகம் என
தனியனாய் நான் திரிந்தேன் ;
பட்டென ஒரு பெருவிரிப்பாய் 
எண்ணிறந்த பொன்  [டப்போடில்ஸ்] மலர்கள்  
ஏரி தொடும்  மரங்கள் கீழாய்
தென்றலில் சிலிர்த்து ஆடுதல் கண்டேன் .
 
பால்வழித் தடம்தனிலே 
இடையறாது கண்சிமிட்டும் 
ஒளிர் தாரகைகள் ஒத்தனபோல் 
ஏரி வளைவு விளிம்பெலாம்   
முடிவிலா வரிசையில் அவை
நெடிதாய் இலங்கிடக் கண்டேன்  
பத்தாயிரம் மலர்கள் ஒரே ஓரு கடைநோக்கில்
உற்சாக நடனத்தில் தலைஅலைக்கக் கண்டிட்டேன் 
 
அடுத்திருந்த அலைகளும் ஆடின
எனினும்  ஒளி தெறிக்கும் அலைகளை
அவை மகிழ்வில் வாகை சூடிடக் கண்டேன்  
இத்தகு ஆனந்தத் துணையில்  
ஒரு கவிஞன் மனம் துள்ளாது கூடுமோ ! 
மீளாத  விழியோடு திகைத்தேன்
ஆயினும் இவ்வினிமைத்  தோற்றம்
எச் செல்வம் எனக்கு ஈந்தது எனும்
எண்ணம் என்னில் சற்றும் இல்லை .
 
 
வெற்று மனத்தோ அன்றி
ஆழ் சிந்தனை அடர்ந்தோ 
அடிக்கடி என் இருக்கையில்
தலை சாய்த்து மயங்குகையில்  
உள்விழியில் அவை பளிச்சிட உணர்கின்றேன்
அதுவே தனிமைப்  பேரானந்தம் என்பேன்.
பின் மகிழ்ச்சி நிறைகின்ற என் இதயம்
அம்மலர்களோடு அழகுநடம் புரியும்
 
--வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
--தமிழ் வடிவம் --சந்திர கலாதர்
30.10.2013 / புதன் / ஐப்பசி 13 / இரவு 11 மணி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
 
DAFFODILS
&
I wandered lonely as a cloud
That floats on high o'er vales and hills,
When all at once I saw a crowd,
A host of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.

          
           Continuous as the stars that shine
           and twinkle on the Milky Way,
They stretched in never-ending line
along the margin of a bay:
Ten thousand saw I at a glance,
tossing their heads in sprightly dance.
The waves beside them danced; but they
Out-did the sparkling waves in glee:
A poet could not but be gay,
in such a jocund company:
I gazed—and gazed—but little thought
what wealth the show to me had brought:

For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.

-- WILLIAM WORDSWORTH

Saturday, October 26, 2013

Krishna Learning To Walk
&
Hands stretched out hesitantly,
A foot on the ground unstably,
Yasoda, teaching the Lord to walk.
Sometimes watching His adorable face...
Storing away the joy in her heart,
Sometimes praising the family deity:
Give long life to her Kanhaiya.
Sometimes calling to Bal
Two to play in her courtyard.
Surdas see the Lords leela
The lustre of bliss of Nandraiya (Yasoda).

Sant Surdas

@@@@@@@@@@@@@@@@@@@@@

நடை பயிலும் கண்ணன்

&

தயங்கியே முன் நீண்ட கரங்கள்

தரை மீது தள்ளாடும் பதங்கள்

யசோதா கடவுளுக்கே நடை தருகிறாள் -

ஒரு நேரம் அழகிய அவன் முகம் பார்த்து

மனதில் தன் மகிழ்ச்சி தேக்கி --

ஒரு நேரம்இல்லத் தெய்வம் போற்றி .

அவள் கண்ணனுக்கு நெடு வாழ்வு கேட்டு

ஒரு நேரம் பலராமன் அழைத்து

இருவரும் முற்றத்தில் சேர்ந்தாடப் பணித்து !



சூர்தாஸ் கிருஷ்ணனின் லீலை கண்டும்

யசோதைதனின் ஆனந்த ஒளி பார்த்தும்

----சூர்தாஸ்
[ ஆங்கிலம் வழி தமிழ் வடிவம் --
சந்திர கலாதர் ]
See more


மீரா தன தோழியிடம் ...
*****************************
ஆட்கொள்ளப்பட்டேன் கிருஷ்ணனின் காதலிலே !
அவனை ஈர்த்திடத்தான் எனை அழகு செய்தேன் .
தோழி , பார் , இப்போது என் விழிகள்
அவனில் மட்டும் திளைக்கின்றன ;...
பறந்திடும் பாதங்களில் அவன் எனை நாடி வந்தான்!

பிரியே , திருமணத் தளை எல்லாம்
கணவன் உயிர் உள்ள வரையே -
எனவே முடிவு இல்லா கிருஷ்ணனையே
எனக்கெனவே உறுதி கொண்டேன்--
எனவே மணந்தபின் என்றும் அவன் எனக்கே !

ஒ கிரிதரா , முன்பிறவிகளில்
நாம் இருவர் ஒருவர் என்றிருந்தோம்
என் கண்ணா , காத்திருக்கேன் உனக்காக ,
ஒ ..என்று வந்து எனை அடைவாய் ?

---சந்திர கலாதர்
25.10.2013 / வெள்ளி / ஐப்பசி 8 / காலை 9.30 மணி

ஆங்கில மொழி மாற்றம் வழி தமிழ் செதுக்கம் --
சந்திர கலாதர் .

@@@@@@@@@@@@@@@@@@@@

lagana hamaaree syaama sum laagee

nainaa nirakha suka paaya |

saajaam simgaara suhaanaam sajani ,

preetama milyaam dhaaya

baranaa baryaam baapuro

janamyaa janama nasaaya |

baryaam saajana saamvaro ree ,

mhaaro churalo amara hojaaya |

janama janama ro kanhado ,

mhaari preeta bujhaaya|

meeraa rae prabhu hari abinaasee ,

kaba rae milasyo aaya ||


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


what meeraa said to her companion

&

possessed by krishnaa's love

I adorned myself to entice him ,

for now my eyes delight in him alone , my friend ;

and he came to meet me on swift feet .


friend , the marriage bond lasts only as long

as one's husband lives ;

therefore I have pledged myself to krishnaa

and wed him who 'll ever be mine ,

the lord deathless .


in previous lives , o giridhara ,

you and I were one ,

I am waiting , lover ,

o when will you come ?


--meeraa

நீ எப்பெயரும் கொண்டவன் ஆகுக

எவ்வடிவும் பெற்றுப் பொலிக

எத்தனை நெடும் கதைகள் மீது அமர்ந்தும் ஒளிர்க
...
எப்படி உணரப்படினும் அப்படியே ஆகுக

ஆணோ பெண்ணோ தாயோ தந்தையோ

எதுவேயாயினும் நிலை பெருக ;

உனக்கு வாகனமாய் கொடியாய் துணையாய்

எதுவேனும் கொள்க .


ஆனால் என் நெஞ்சால் , உதடுகளால்

உச்சரிக்கப்படுகையில் மட்டும்

கடவுள் என்றோ , தெய்வம் என்றோ

இறைவனே என்று மட்டுமே

அன்போடு அழைக்கப்படுவது ஆகுக

உனை ஒன்றி மனம் குவிக்கையில்

என் நெஞ்சே உன் வாகனம் ஆகுக .


இறைவா !

என் நெஞ்சில் எழுகின்ற கோரிக்கைகள்

என் துன்பங்கள் மட்டுமே சாராத வரம் அருள்க !


வல்லோனே ! நல்லோனே !

எளியோரை வருத்தும் வலியோர்

நல்லாரை நசுக்கும் நய வஞ்சகர்

பெண் சூறையாடும் அற்பர்

அதற்குத் துணைபோகும் பெண் பேயர்

அனைவரும் நில்லாக் கடும் அரிப்பெடுத்து

இரத்தமாய்ச் சிவந்து அலறி ஓடி

எப்பிறவியும் இப்பாபம் செய்யோம் செய்யோம்

என்று கதறி அழ அவர் உயிர் பறிப்பாய் ;

காலம் கனியட்டும் தீயவை குவியட்டும்

மெதுவாய் அவதாரம் எடுப்போம் எனும்

ஒத்திப் போடும் பழங் கதைகள் இனி வேண்டாம்

பொல்லாத சோம்பற்தனம் உனக்கு வேண்டாம்.


விழி புயலாய்.... வா பிரளயமாய் !


---சந்திர கலாதர்
மீரா ஆழ்ந்த காதல் கண்ணன்பால் கொண்டவள் ...எளிய சிந்தனையாய் எளிய மொழிகளில் ஆர்ப்பாட்டமில்லாது அலங்காரமில்லாது பேசுகிறாள் ...இதில் பெரிய கவித்துவம் இல்லை ..ஆனால் ஓர் பெண்ணின் ஆழ்ந்த காதல் பூர்ணி மைப் பால் நிலவாய் வழிந்தோடுகிறது

&

தோழி , என் விழிகள் என் அன்பன் கிருஷ்ணனுக்காகவே .
ஒவ்வொரு நொடியும் அவன் வருவான் என்று நம்பியே
நாளும் பொழுதும் ஏங்கித் தவிக்கிறேன்

குயில் கூவுகையில் இதயத்தை
ஓர் அம்பு குடைந்து குடைந்து துளைப்பதாய்த் தவிக்கிறேன்

பெரியோர் சிலர் இகழ்கின்றனர்
சிலர் கடிந்து கொள்கின்றனர்
பிறர் என்னை வெறுக்கின்றனர்
ஆனால் நான் கிருஷ்ணனுக்கு விலையானேன்
அவன் அடிமை நான்

தொடர் பிறப்புகள் அனைத்தும் என் காதலை
அவனிடம் ஈடு கொடுத்துவிட்டேன்
எப்போதும் அவனுடன் நான் இணைந்திருப்பேன்

---மீரா
[ ஆங்கிலம் வழி தமிழ் வடிவம் --
சந்திர கலாதர் ]
25.10.2013 / வெள்ளி / ஐப்பசி 8 / இரவு 10.30 மணி

*************************************************
I only have eyes , friend , for krishnaa , my loved one ,
day after day I pine way , believing each moment ,he'll come .

when the cuckoo coos it's as though a dart
had pierced my heart through and through .

my elders deride me , some of them chide me others revile me ;
but I am sold to krishnaa , I 'm his slave .

I have pledged my love to him life after life
and I am united with him always .
--meeraa