Saturday, October 26, 2013

நீ எப்பெயரும் கொண்டவன் ஆகுக

எவ்வடிவும் பெற்றுப் பொலிக

எத்தனை நெடும் கதைகள் மீது அமர்ந்தும் ஒளிர்க
...
எப்படி உணரப்படினும் அப்படியே ஆகுக

ஆணோ பெண்ணோ தாயோ தந்தையோ

எதுவேயாயினும் நிலை பெருக ;

உனக்கு வாகனமாய் கொடியாய் துணையாய்

எதுவேனும் கொள்க .


ஆனால் என் நெஞ்சால் , உதடுகளால்

உச்சரிக்கப்படுகையில் மட்டும்

கடவுள் என்றோ , தெய்வம் என்றோ

இறைவனே என்று மட்டுமே

அன்போடு அழைக்கப்படுவது ஆகுக

உனை ஒன்றி மனம் குவிக்கையில்

என் நெஞ்சே உன் வாகனம் ஆகுக .


இறைவா !

என் நெஞ்சில் எழுகின்ற கோரிக்கைகள்

என் துன்பங்கள் மட்டுமே சாராத வரம் அருள்க !


வல்லோனே ! நல்லோனே !

எளியோரை வருத்தும் வலியோர்

நல்லாரை நசுக்கும் நய வஞ்சகர்

பெண் சூறையாடும் அற்பர்

அதற்குத் துணைபோகும் பெண் பேயர்

அனைவரும் நில்லாக் கடும் அரிப்பெடுத்து

இரத்தமாய்ச் சிவந்து அலறி ஓடி

எப்பிறவியும் இப்பாபம் செய்யோம் செய்யோம்

என்று கதறி அழ அவர் உயிர் பறிப்பாய் ;

காலம் கனியட்டும் தீயவை குவியட்டும்

மெதுவாய் அவதாரம் எடுப்போம் எனும்

ஒத்திப் போடும் பழங் கதைகள் இனி வேண்டாம்

பொல்லாத சோம்பற்தனம் உனக்கு வேண்டாம்.


விழி புயலாய்.... வா பிரளயமாய் !


---சந்திர கலாதர்

No comments:

Post a Comment