என் உரையாய்
***********************
இந்தக் கவிதையில் ஒரு சோகம் இழைகிறது ;
இது முதுமையில் அல்லது வாழ்வில் மரணத்தின்
அழைப்பு தொலை தூரத்தில் மெலிதாக ஆனால் உறுதியாகக் கேட்பவர்களுக்கே நன்கு புரியும் .
அழைப்பு தொலை தூரத்தில் மெலிதாக ஆனால் உறுதியாகக் கேட்பவர்களுக்கே நன்கு புரியும் .
எனக்குத் தெளிவாக அவ்வோசை செவி வீழ்கிறது .
இளமைக்கு அது புரியாது .
இலையுதிர் காலங்கள் தப்பாது அதை கண் காட்சி ஆக்கும் .
--சந்திர கலாதர்
@@@@@@@@@@@
மந்தமான இலையுதிர் நாள் மெதுவாகத் தேய்கிறது
இடை வெளியில் பழுப்பு இலை மெதுவாகச் சுழல்கிறது
ஒளி எத்தனை தெள்ளத் தெளிவாய் !
காற்று வியத்தகு தூய்மையாமாய் !
ஆனால் , கண்படாத் தேய்வு நலிவுகளில் இருந்து உயிர் தப்ப இயலவில்லை.
ஆனால் , கண்படாத் தேய்வு நலிவுகளில் இருந்து உயிர் தப்ப இயலவில்லை.
நாளும் அது சற்றுக் கூடுதல் முதுமை பெறுகிறது
ஆண்டாண்டு இப்பழுத்த இலை சுழல்கிறது.
கடந்த காலங்களில் என்றும் இலையுதிர் பருவம்
இத்தனை சோகித்திருந்தது இல்லை என்று
நினைவு எடுத்துச் சொல்கிறது
அல்லது வெறுமனே கற்பனை கொள்கிறது
--அலெக்சாந்தர் ப்ளோக்
[ தமிழ் வடிவம் ---சந்திர கலாதர் ]
சனி / புரட்டாசி / மாலை மணி
@@@@@@@@@@@@@
slowly the tardy autumn day is waning,
slowly the yellow leaf spins in mid-air ,
the light's so crystal clear ,
the air is so wondrous pure
but soul cannot escape the unseen wear and tear .
and every day it grows a little older ,
and every year the yellow leaf spins by ,
and memory recalls , or just imagines ,
that autumn never was so sad in years gone by .
--alexander blok
[ Russian poet 1880-1921]

No comments:
Post a Comment