தோட்டக்காரன் --[ 46 ]
******************************
&
எனை நீங்கி உன் வழி சென்றாய் .
உனக்காகத் துயர் மூழ்க எண்ணினேன்
உன் தனித்த உருவம் பொன்னில் வடித்து இதயம் பதிக்கச் சிந்தித்தேன் .
ஆனால் , ஆ , என் பொல்லா நேரம் , காலம் குறுகியது . .
இளமை ஆண்டாண்டு தேய்கிறது ;
வசந்த நாட்கள் பறக்கின்றன ;
மெல்லிய மலர்கள் காரணமின்றி மடிகின்றன ;
அறிஞர்கள் வாழ்க்கை தாமரை இதழ்ப் பனிமுத்து என்று எச்சரிக்கின்றனர் .
எனக்குத் தன் புறம் திருப்பிய ஒருத்தியை உற்று நோக்குதற்கு இவற்றை எல்லாம் நான் புறம் தள்ளுதல் தகுமோ ?
அது மூடத்தனமும் முரட்டுத்தனமுமானது. ;
ஏனெனில் காலம் குறுகியது.
ஆதலின் , எனது மழை இரவுகளே , சடசடக்கும் பாதங்களோடு வாருங்கள் ;
பொன் உதிர் காலங்களே , மென்னகை புரியுங்கள் ;
கவலையிலா ஏப்ரலே ,வெளியெங்கும் உன் முத்தம் சிதறி வா !
நீ வா , ஆம் நீ.. ..நீயும் கூடத்தான் !
என் நேசங்களே , நாம் அற்பமானுடர் என்பது அறிவீர்கள் ;
தன் இதயம் பறித்துச் செல்லும் ஒருத்திக்காக ஒருவன் தன்னிதயம் சிதைத்துக் கொள்ளல் அறிவுடைமை ஆகுமோ ?
ஏனெனில் காலம் குறுகியது
.
ஒரு மூலை அமர்ந்து சிந்தித்து , என் அனைத்துலகும் நீ தான் என்று சந்தங்களில் சந்திப்பது இனிமையானதே .
ஆறுதல் விடுத்து சோகம் தழுவுதலே வீரம் சார்ந்தது ;
ஆனால் ஒரு புதிய முகம் என் வாயில் எட்டிப் பார்க்கிறது ;
அதன் விழி உயர்த்தி என் விழி சந்திக்கிறது .
என் கண்ணீரை துடைத்துக் கொள்ளத்தான் கூடும் ;
என் பாடலின் ராகம் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்
ஏனெனில் காலம் குறுகியது .
---ரபீந்தரநாத் தாகூர்
[ தமிழ் வடிவம் ---சந்திர கலாதர் ]
25.09.2013 / புதன் / புரட்டாசி 9 .
@@@@@@@@@@@@@@@@@@
THE GARDENER---[ 46 ]
&
you left me and went on your way .
I thought I should mourn for you and set your solitary image in my heart wrought in a golden image .
but ah , my evil fortune , time is short .
youth wanes year after year ;
the spring days are fugitive ;
the frail flowers ie for nothing ,
and the wise man warns me that life is but a dewdrop on the lotus leaf .
should I neglect all this to gaze after one who has turned her back on me ?
that would be rude and foolish , for time is short .
then , come , my rainy nights with pattering feet ;
smile , my golden autumn ;
come , careless april , scattering your kisses abroad .
you come , and you , and you also !
my loves , you know we are mortals .
is it wise to break one's heart for the one who takes her heart away?
for me time is short .
it is sweet to sit in a corner to muse and write in rhymes that you are all my world .
it is heroic to hug one's sorrow and determine not to be consoled .
but a fresh face peeps across my door and raises its eyes to my eyes .
I cannot but wipe away my tears and change the tune of my song .
for time is short.
--RABINDRANATH TAGORE

No comments:
Post a Comment