Sunday, September 29, 2013

அது ஒரு காலம் ,அன்பே
**************************
அது ஒரு காலம் , அன்பே !
நீ , பூ நகைகள் அணிந்து ,
இதேமரத்தடியில்
நாம் அமர்ந்திருப்போம் ; ....
அந்த நாட்களை மறந்தனையோ ?
அருகே ஓடும் இந்த ஆறு
தன் அலைபோல் நெளிந்திடும்
உன் பின்னல் அழகை
இன்னமும் மறக்கவில்லை ; .
அதன் மணற்கரையில் உன் பாதச் சுவடுகள்
இன்னமும் தேடி அடையக் கூடுவன --.

இவை அனைத்தும் வெற்றுக் கனவு என நீ
மறந்தனையோ ?

நாளும் பொழுதும் தனித்து அமர்ந்து
இனிய பாடல்கள் நீ தொடுத்தது
நினைவில் இன்னமும் பிரியாது இழைகின்றதே;
அவற்றின் எதிரொலிகள் இன்னமும் பசும் புற்களிடை
ஒரு ஆனந்தச் சிலிர்ப்பு அனுப்புகிறதே !
நிழலில் அமர்ந்து மாலை தொடுப்பதற்காக
மலர்கள் சேகரிப்பாயே
அங்கு , பங்குனி , உன் முந்தானை தீண்டலில் மகிழ்ந்திருக்குமே --
அது இன்னமும் உன் பொருட்டு ' சண்பக ' மலர்கள் தேடுகிறது

இவை அனைத்தும் வெற்றுக் கனவு என
நீ மறந்தனையோ ?

---ரபீந்தரநாத் தாகூர்
[ தமிழ் வடிவம் --சந்திர கலாதர் ][ ஆங்கில மொழிமாற்றம் வழி ]
[ 29.09.2013 / ஞாயிறு / புரட்டாசி 13 / பகல் 11 மணி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

there was a time , love ,
when you used to sit under this very tree
bedecked in your flower-ornaments .
have you forgotten those days ?
the river that flows by , as of old
has not forgotten your braid of hair
sinuous as her own waves are ,
and your footprints can still be traced
on her sandbanks .

are these all an empty dream
which you have forgotten ?

the melodies you strung together
day after day , as you sat alone
linger there still ,
and their echoes still send
a shiver of delight among the blades of grass .
'phalgun ' , happy for the touch of your sari's end
where you gather flowers to weave into a garland ,
as you sat in the shade,
still goes on looking for ' champa ' flowers for you .

are these all an empty dream
which you have forgotten ?

---Rabindranath tagore
[ ekadaa tumi priyey , 1917 in Bengali ]
[ translated bykshitis roy ]
See more

Saturday, September 28, 2013

என் உரையாய் 
***********************
இந்தக் கவிதையில் ஒரு சோகம் இழைகிறது ;
இது முதுமையில் அல்லது வாழ்வில் மரணத்தின்
அழைப்பு தொலை தூரத்தில் மெலிதாக ஆனால் உறுதியாகக் கேட்பவர்களுக்கே நன்கு புரியும் .
எனக்குத் தெளிவாக அவ்வோசை செவி வீழ்கிறது .
இளமைக்கு அது புரியாது .
இலையுதிர் காலங்கள் தப்பாது அதை  கண் காட்சி ஆக்கும் .
 
--சந்திர கலாதர்  
 
@@@@@@@@@@@
 
மந்தமான இலையுதிர் நாள் மெதுவாகத் தேய்கிறது
இடை வெளியில் பழுப்பு இலை மெதுவாகச் சுழல்கிறது
ஒளி எத்தனை தெள்ளத் தெளிவாய் !
காற்று வியத்தகு தூய்மையாமாய் !
ஆனால் , கண்படாத்  தேய்வு நலிவுகளில் இருந்து  உயிர் தப்ப  இயலவில்லை.
 
நாளும் அது சற்றுக் கூடுதல் முதுமை பெறுகிறது
ஆண்டாண்டு இப்பழுத்த இலை சுழல்கிறது.
கடந்த காலங்களில் என்றும் இலையுதிர் பருவம் 
இத்தனை சோகித்திருந்தது இல்லை என்று
நினைவு எடுத்துச் சொல்கிறது 
அல்லது வெறுமனே கற்பனை கொள்கிறது   
--அலெக்சாந்தர் ப்ளோக்
[ தமிழ் வடிவம் ---சந்திர கலாதர் ]
சனி / புரட்டாசி / மாலை மணி  
 
@@@@@@@@@@@@@
 
slowly the tardy autumn day is waning,
slowly the yellow leaf spins in mid-air ,
the light's so crystal clear ,
the air is so wondrous pure
but soul cannot escape the unseen wear and tear .
 
and every day it grows a little older ,
and every year the yellow leaf spins by ,
and memory recalls , or just imagines ,
that autumn never was so sad in years gone by .
 
--alexander blok
[ Russian poet 1880-1921]  
 
 

Wednesday, September 25, 2013

தோட்டக்காரன்  --[ 46 ]
******************************
&
எனை நீங்கி உன் வழி சென்றாய் .
உனக்காகத் துயர் மூழ்க எண்ணினேன்
உன் தனித்த உருவம் பொன்னில் வடித்து இதயம் பதிக்கச் சிந்தித்தேன் .
ஆனால் , ஆ , என் பொல்லா நேரம் , காலம் குறுகியது . .
 
இளமை ஆண்டாண்டு தேய்கிறது ;
வசந்த நாட்கள் பறக்கின்றன ;
மெல்லிய மலர்கள் காரணமின்றி மடிகின்றன ;
அறிஞர்கள் வாழ்க்கை தாமரை இதழ்ப் பனிமுத்து என்று எச்சரிக்கின்றனர் .
எனக்குத்  தன் புறம் திருப்பிய ஒருத்தியை உற்று நோக்குதற்கு  இவற்றை எல்லாம் நான் புறம் தள்ளுதல் தகுமோ  ?
அது மூடத்தனமும் முரட்டுத்தனமுமானது. ;
ஏனெனில் காலம்  குறுகியது.
 
ஆதலின் , எனது மழை இரவுகளே , சடசடக்கும் பாதங்களோடு  வாருங்கள் ;
பொன் உதிர் காலங்களே , மென்னகை புரியுங்கள் ;
கவலையிலா  ஏப்ரலே ,வெளியெங்கும் உன் முத்தம் சிதறி வா !
நீ வா , ஆம் நீ.. ..நீயும் கூடத்தான் !
என் நேசங்களே , நாம்  அற்பமானுடர் என்பது அறிவீர்கள் ;
தன் இதயம் பறித்துச் செல்லும் ஒருத்திக்காக ஒருவன் தன்னிதயம் சிதைத்துக்  கொள்ளல் அறிவுடைமை ஆகுமோ ? 
ஏனெனில் காலம் குறுகியது
  .
ஒரு மூலை அமர்ந்து சிந்தித்து , என் அனைத்துலகும் நீ தான் என்று சந்தங்களில் சந்திப்பது  இனிமையானதே .
ஆறுதல் விடுத்து சோகம் தழுவுதலே வீரம் சார்ந்தது ;
ஆனால் ஒரு புதிய முகம் என் வாயில் எட்டிப் பார்க்கிறது ;
அதன் விழி உயர்த்தி என் விழி சந்திக்கிறது .
என் கண்ணீரை துடைத்துக் கொள்ளத்தான் கூடும் ;
என் பாடலின் ராகம் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்     
 ஏனெனில் காலம் குறுகியது .
 
---ரபீந்தரநாத் தாகூர் 
[ தமிழ் வடிவம் ---சந்திர கலாதர் ]
25.09.2013 / புதன் / புரட்டாசி 9 . 
 @@@@@@@@@@@@@@@@@@
 
THE GARDENER---[ 46 ] 
&
you left me and went on your way .
I thought I should mourn for you and set your solitary image in my heart wrought in a golden image .
but ah , my evil fortune , time is short .
 
youth wanes year after year ;
the spring days are fugitive ;
the frail flowers ie for nothing ,
and the wise man warns me that life is but a dewdrop on the lotus leaf .
 
should I neglect all this to gaze after one who has turned her back on me ?
that would be rude and foolish , for time is short .
 
then , come , my rainy nights with pattering feet ; 
smile , my golden autumn ; 
come , careless april , scattering your kisses abroad .
you come , and you , and you also !
my loves , you know we are mortals . 
is it wise to break one's heart for the one who takes her heart away? 
for me time is short .
 
it is sweet to sit in a corner to muse and write in rhymes that you are all my world .
it is heroic to hug one's sorrow and determine not to be consoled .
but a fresh face peeps across my door and raises its eyes to my eyes .
I cannot but wipe away my tears and change the tune of my song .
for time is short. 
 
--RABINDRANATH TAGORE
 
 

Thursday, September 19, 2013

படகுத் துறை ...[ 76 ]
@@@@@@@@@@@


உன்  முகத்தைப் பார்த்ததாக உணர்ந்தவுடன்
இருளில் படகினைச் செலுத்தினேன் .

இதோ , காலை சிறுநகையில் புலர்கின்றது ;
வசந்த மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன !

ஒளி மறையினும் மலர்கள் வாடினும்
என் பயணம் தொடர்வேன் .

சொல் இழந்த அசைவுகள் நீ காட்டியபோது
இவ்வுலகம் தூங்கியது ;
இருள் , மேனி  திறந்து கிடந்தது .

இதோ , மணி நாதம் ஓங்கி ஒலிக்கின்றது ;
தங்கச் சுமை படகு ஏறி இருக்கின்றது !

மணியோசை அடங்கினும்
படகு வெறுமை போயினும்
என் பயணம் முன்னேகும் .

சில படகுகள் அகன்று விட்டன ;
சிலவோ ஆயத்தமாகவில்லை ;
எனினும் சற்றும் தாமதியேன் .

பாய்கள் புடைத்து விம்முகின்றன ;
மறுகரையிலிருந்து பறவைகள் திரும்பிவிட்டன .

பாய்கள் தொய்வுறினும்
கரையின் சேதி தொலைந்திடினும்
முன் பயணிப்பேன் .

---ரபீந்தரநாத் தாகூர் .
[ தமிழ் வடிவம் --சந்திர கலாதர் ]
20.09.2013 /வெள்ளி / புரட்டாசி 4

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

CROSSING --[ 76 ]

&

I felt I saw your face , and I launched my boat in the dark .

now the morning breaks in smiles and the spring flowers are in bloom .

yet should the light fail and the flowers fade I will sail onward.

when you made mute signal to me the world slumbered and the darkness was bare .

now the bells ring and the boat is laden with gold .

yet should the bells become silent and my boat be empty I will sail onward .

some boats have gone away and some are not ready , but I will not tarry behind .

the sails have filled , the birds come from the other shore .

yet , if the sails droop , if the message of the shore be lost , I will sail onward .

----RABINDRANATH TAGORE .