கீதாஞ்சலி --[ 2 ]
&
' பாடு ' என்று நீ எனைப் பணிக்கையில்
பெருமிதத்தில் என் இதயம்
உடைந்துகொள்ளுமோ எனத் தோன்றுகிறது .
உன் முகம் பார்க்கிறேன் ;
விழிகளில் நீர் நிறைகின்றது .
என் வாழ்வின் அனைத்துக் கடுமைகளும் முரண்பாடுகளும்
ஒரு இனிய லய இசைவுள் இளகுகின்றன --
கடல் ஊடாய்ப் பறந்திடும் ஒரு ஆனந்தப் பறவை போல்
என் போற்றுதல்கள் சிறகு விரிக்கின்றன .
என் பாடுதலில் நீ மகிழ்வு அடைகிறாய் என்று அறிகிறேன்
நான் பாடகன் என்பதாக மட்டுமே
உன் முன்னிலை வருகிறேன் என்பதும் நான் அறிகிறேன்.
உன் பாதங்களை அடைதற்கு
ஒருபோதும் வேட்கை கொள்ள தகுதியற்ற நான்
என் பாடலின் விரிந்து பரந்த இறக்கை விளிம்புகளால்
அவற்றைத் தொடுகிறேன் .
பாடும் மகிழ்வில் மதி கிறங்கி
எனையே மறந்து
என் தலைவ , உன்னைத்
' தோழனே ' என்று அழைக்கிறேன்
---ரபீந்த்ரநாத் தாகூர் .
[தமிழ் முயற்சி ---சந்திர கலாதர் ]
2 9 /௦ 1 /2 ௦ 1 4 /புதன் /தை 16
@@@@@@@@@@@@@@@@@@
.
GITANJALI --II [ 2 ]
&
WHEN thou commandest me to sing , it seems , that my heart would break with pride ;
and I look to thy face ,and tears come to my eyes .
all that is harsh and dissonant in my life melts
into one sweet harmony --
and my adoration spreads wings
like a glad bird on its flight across the sea .
I know thou takest pleasure in my singing .
I know that only as a singer
I come before thy presence .
I touch by the edge of the far-spreading wing of my song
thy feet which I could never aspire to reach .
drunk with the joy of singing I forget myself
and call thee friend who art my lord .
---

No comments:
Post a Comment