Monday, February 3, 2014

கீதாஞ்சலி --[ 9 ]
&
ஏ மூடனே ,உன் தோள் மீதே
உனைச் சுமக்க முயல்கிறாயே !...
ஓ பிச்சைக்காரனே ,
உன் வீட்டின் முன்னேயே
பிச்சைக்கு நிற்கிறாயே !

அனைத்தும் தாங்கவல்லான் கரங்களில்
உன் சுமைகள் அனைத்தையும் விட்டு அகல் .
பின் ஒருபோதும் வருந்தித் திரும்பாதே.

உன் ஆசை தன் மூச்சின் தொடுகையிலேயே
விளக்கின் சுடரை அணைத்துவிடுகிறது .
அது புனிதம் அற்றது --
உனது பரிசுகளைத் தூய்மையற்ற
அக்கரங்களில் எடுத்துவிடாதே .
புனித அன்பினில் வழங்கப்படுவதை மட்டுமே
பெற்றுக்கொள்வாய் .

---ரபீந்த்ரநாத் தாகூர் .

[ தமிழ்ச் சிற்பம் -- சுந்தரம் சந்திரகலாதர் ]
தை 2 1 / திங்கள் / 03.02.2014

@@@@@@@@@@@@@@@@@@@@

GITANJALI -IX [ 9 ]
&
O FOOL , to try to carry thyself upon thy own shoulders !
o beggar , to come to beg at thy own door !

leave all thy burdens on his hands
who can bear all ,
and never look behind in regret .

thy desire at once puts out the light of the lamp
it touches with its breath .
it is unholy --
take not thy gifts through its unclean hands .
accept only what is offered by sacred love.

---RABINDRANATH TAGORE .

Sunday, February 2, 2014

gitanjali [4 ] tamil translation

கீதாஞ்சலி --[ 4 ]
&
என் வாழ்வின் வாழ்வே !
என் அனைத்து உறுப்புகள் மீதும்
உனது உயிர்ப்பான தொடுதல் தெரிந்து 
என் மேனியைத் தூய்மையாய் வைத்திட
எப்பொழுதும் முயல்வேன் .
என் மனதின் பகுத்தறிவின் ஒளிதூண்டும்
உண்மையாய்  நீ இருப்பது அறிந்து
என் எண்ணங்களிலிருந்து உண்மையிலாதன 
அகற்றிட எப்பொழுதும் முயல்வேன் .
என் இதயத்தின் மையக் கருவறையில் 
உன் இருக்கை இலங்குவது உணர்ந்து 
என் இதயம் இருந்து தீயவை அனைத்தும் 
எப்பொழுதும் துரத்திட முயல்வேன் ;
என் அன்பிலும் மலர்வேன் .
ரபீந்த்ரநாத் தாகூர் .
[ தமிழ் முகம் ---சந்திர கலாதர் ]
ஞாயிறு / தை / 02.02.2014
@@@@@@@@@@@@@@@@@@
GITANJALI -IV  [ 4 ]
&
LIFE  of my life , i shall ever try to keep my body pure ,
knowing that thy living touch is upon all my limbs .
i shall ever try to keep all untruths out from my thoughts ,
knowing that thou art that truth which has kindled
the light of reason in my mind .
i shall ever try to drive all evils away from my heart 
and keep my love in flower ,
knowing that thou hast thy seat 
in the inmost shrine of my heart .
and it shall be my endeavour
to reveal thee in my actions ,
knowing it is thy power 
gives me strength to act .
----RABINDRANATH TAGORE .

Tuesday, January 28, 2014

கீதாஞ்சலி --[ 2 ]
&
' பாடு ' என்று நீ எனைப் பணிக்கையில்
பெருமிதத்தில் என் இதயம்
உடைந்துகொள்ளுமோ  எனத் தோன்றுகிறது .
உன் முகம் பார்க்கிறேன் ;
விழிகளில் நீர் நிறைகின்றது .
 
என் வாழ்வின் அனைத்துக் கடுமைகளும்  முரண்பாடுகளும்
ஒரு இனிய லய இசைவுள் இளகுகின்றன --
கடல் ஊடாய்ப்  பறந்திடும் ஒரு ஆனந்தப் பறவை போல்
என் போற்றுதல்கள் சிறகு விரிக்கின்றன .
 
என் பாடுதலில் நீ மகிழ்வு அடைகிறாய்  என்று அறிகிறேன்
நான் பாடகன் என்பதாக மட்டுமே   
உன் முன்னிலை வருகிறேன் என்பதும் நான் அறிகிறேன்.
 
உன் பாதங்களை  அடைதற்கு 
ஒருபோதும் வேட்கை கொள்ள தகுதியற்ற  நான்
என் பாடலின் விரிந்து பரந்த இறக்கை விளிம்புகளால்
அவற்றைத் தொடுகிறேன் .
 
பாடும் மகிழ்வில் மதி கிறங்கி 
எனையே மறந்து
என் தலைவ , உன்னைத்  
' தோழனே ' என்று அழைக்கிறேன்
 
---ரபீந்த்ரநாத்  தாகூர் .
 
[தமிழ் முயற்சி ---சந்திர கலாதர் ]
2 9 /௦ 1 /2 ௦ 1 4 /புதன் /தை 16
@@@@@@@@@@@@@@@@@@
 
.
GITANJALI --II [ 2 ]
&
WHEN  thou commandest me to sing , it seems , that my heart would break with pride ;
and I look to thy face ,and tears come to my eyes .
 
all that is harsh and dissonant in my life melts
into one sweet harmony --
and my adoration spreads wings
like a glad bird on its flight across the sea .
 
I know thou takest pleasure in my singing .
I know that only as a singer
I come before thy presence .
 
I touch by the edge of the far-spreading wing of my song
thy feet which I could never aspire to reach .
 
drunk with the joy of singing I forget myself
and call thee friend who art my lord .
 
---RABINDRANATH  TAGORE

 
 
--- 

Monday, January 27, 2014

translation of THE GARDENER [ 61] OF RABINDRANATH TAGORE

தோட்டக்காரர்   [ 61 ]
&
அமைதி கொள் , என் இதயமே ,
பிரியும் வேளை இனிதாய் இருக்கட்டும் .
 
அது ஒரு மரணம் என்றாக வேண்டாம்
ஆனால் முழுமையானதாகட்டும் .
 
காதல் நினைவுள்ளும்
வலி பாடல்களுள்ளும் உருகட்டும் .
 
வானில் பறத்தல் ஆனது
கூட்டில் இறக்கைகள் மூடலில் முடியட்டும் .
 
உனது கரங்களின் இறுதித் தொடுதல்
இரவு மலரினைப்போல் மென்மையாகட்டும் .
 
ஓ..அழகிய முடிவே,
ஓர் நொடி சலனமற்று நில் ;
பின் மௌனத்தில்
உனது கடைசி மொழிகள் சொல்.
 
உனக்குத் தலை வணங்குகிறேன் ;
உன் பாதைக்கு ஒளி ஊட்ட
என் விளக்கினை உயர்த்திப் பிடிக்கிறேன் .
 
---ரபீந்த்ரநாத் தாகூர் .
 
[ தமிழ்த் தேரில் ---சந்திர கலாதர் ]
செவ்வாய் / தை 1 5  /   நண்பகல்
28.01.2014
@@@@@@@@@@@@@@@
 
THE GARDENER [ 61]
&
PEACE ,my heart , let the time for the parting be sweet .
 
let it not be a death but completeness.
 
let love melt into memory and pain into songs .
 
let the flight through the sky end in the folding of the wings
over the nest .
 
let the last touch of your hands be gentle like the flower of the night .
 
stand still . o beautiful end , for a moment,
and say your last words  in silence .
 
I bow to you and hold up my lamp to light you on your way .
 
---RABINDRANATH TAGORE .