Sunday, November 3, 2013

கீதாஞ்சலி ---XXXVII { 38 }
&
" நீ வேண்டும் ... நீயேதான் வேண்டும் ''--
இதனையே என் இதயம் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கட்டும் .
அல்லும் பகலும் எனைத் திசை திருப்பும் அனைத்து ஆசைகளும் உட்கூடற்றதும் பொய்மையும் ஆகும் .
 
இரவு தன் இருளில் ஒளியின் வேண்டுகோளை மறைத்திருக்கிறது  ;
அதுபோலவே என் உள்ளுணர்வு இன்மையின்  ஆழத்திலும் கூட
"நீ வேண்டும் ...நீயேதான் வேண்டும் " எனும் ஓலம் வளையமிடுகிறது .
 
புயல் அமைதியின் மீதாய் தன் முழு சக்தி கொண்டு தாக்குகிறது ;
இருப்பினும் அதன் முடிவில் அமைதியையே தேடுகிறது --
அதுபோலவே எனது எழுச்சிக் கலகங்கள் உன் பாசத்தின் மீது தாக்கினாலும்
அதன் ஓலம் இன்னமும் , " நீ வேண்டும் ...நீயேதான் வேண்டும் " என்பதேயாகும்.
 
---ரபீந்தரநாத் தாகூர் .
[ தமிழ் ஆக்கம் --சந்திர கலாதர் சுந்தரம்
03.11.2013 / ஞாயிறு / ஐப்பசி 17/  மாலை 6 மணி
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
 GEITANJALI -XXXVII--38
&
that I want thee , only thee --let my heart repeat without end .
all desires that distract me , day and night , are false  and empty to the core .
 
as the night keeps hidden in its gloom the petition for light 
even thus in the depth of my unconsciousness rings the cry --
' I want thee , only thee '.
 
as the storm still seeks its end in peace when it strikes against peace
with all its might , even thus my rebellion strikes against thy love
and still its cry is --.' I want thee , only thee '
 
--RABINDRANATH TAGORE .     

Friday, November 1, 2013

இப்போது ஷேக்ஸ்பியர் 
&
என் உரையாய் :--
 
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பற்றித்தான் பலர் அறிந்தது ...ஆனால் அவரின் கவிதைகள் மிக உன்னதமானவை ..மிக ஊன்றிப் படித்தால் ஜீவநதிபோல் இனிமை பெருக்கிடும் ..அவரது 14 வரிக் கவிதைகள்  மிக அழகானவை ;  '  சொன்னெட்  ' என்று கவிதை ஒழுங்கில் அமைக்கப் பட்டவை .
இக்கவிதை :--
ஒரு அழகிய வாலிபனை நோக்கி ஒருவர் அறிவுரை கூறுவதாய் அமைந்த ஒன்று .
அவனை திருமணம் செய்துகொண்டு அவனில் திகழும் அழகை இவ்வுலகில் தொடர்ந்து நிலை நிறுத்துமாறு ...அது அவன் தன் நிறைவால்..தன்னலத்தால் ...அவன் கருமித்தனத்தால் அவனோடு அவன் பின் அழகு மறைந்து போய்விடலாகாது ..சந்ததிகள் தொடர்ந்து உலகை மகிழ்வூட்ட வேண்டும் என்கிறார்
இளமூடனே ..உலகின் மீது கருணை கொள் என்கிறார் .
 
&  
 
விளக்க உரை :-
அழகின் அழகுகள் மக்கட்பேறு அடைந்து அவர்களின் அழகு சந்ததிகள் தொடர்ந்து பாராட்டப்பட  வேண்டும் என்று நாம் விழைகிறோம் .
அவன் மரணம் அடைந்தபின் அவனது இளவல்  அவனது  முன்னோரின் அழகின் பதிப்பாய் இருக்கும் அல்லவா ?
ஆனால் நீ...உன் அழகின்மீதே வெறியாய் , தன்னலமாய் உன் அழகின் தீக்கொழுந்துகளையே அணைக்கத் துணிந்து விடுகிறாய்
இவ்வுலகினை உன் செயலால் அழகின் பெருக்கை இழக்கச் செய்கிறாய்
நீயே உன் எதிரி ஆகிறாய்
நீ திருமணம் செய்து அழகை நிலைப்படுத்தாது உன் இனிய அழகிற்கே நீ கொடுமை புரிகிறாய்
நீ இவ்வுலகின் புத்தாபரணம் ...உலகின் வண்ணங்கள் செழுமிய வசந்த வருகையை அறிவிக்க வேண்டியவனாய் இருக்கும் நீயே ,உன் விழிகளுள் உன் அழகைப் புதைத்து கொள்வதும் ,தன்னலத்தால் அதை வீணாக்குதலும் முறையோ ?
எனவே உலகின் மீது கருணை கொண்டு திருமணம் செய்து மக்கட்பேறு அடை 
இல்லாவிடில் பேராசை கொண்டவனாய் இவ்வுலகிற்கு உரியதையும்  இடுகாட்டுடன் இணைந்து நீ தின்றுவிடு .
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@   
 
அழகு தன்மிகையாதல் வேண்டும்
&
அழகின் அழகிய படைப்புகள் அனைத்தும்
தொடர்மிகையாதலே நாம் விழைகிறோம் 
அதனால் அழகின் ரோஜா
என்றும் இறவாநிலை பெரும் அன்றோ --
கால நடையில்  ஒருவன் 
முதிர்வில்  மறைகையில் 
அவன் இளவல்  அவன் பதிப்பாய் இலங்கும் அன்றோ
ஆனால் நீயோ
உன் ஒளிர் விழிகளோடு ஒப்பந்தம் கொண்டனை -
தன்னலப் பெருக்கு ஊட்டி 
உன் ஒளிநாவினை அணைக்கிறாய்
வளம் கொழிக்கையில் பஞ்சம் படைக்கிறாய்
உனக்கு நீயே எதிரி ஆகிறாய் ;
இனிய ' தன்னையே ' மிகக்  கொடுமை செய்கிறாய்
உலகின் புத்தணியாய் நீ இதோ இருக்கிறாய் 
வண்ண வசந்தவருகை  முழக்கிட 
 நீ ஒருவனே இருக்கிறாய்
ஆனால் நீயோ உன் மொட்டினுள்ளேயே
உன் எழில்யௌவனம்  புதைக்கிறாய்  
இள மூட ! கஞ்சத்தனம் கொண்டு 
அழகு பாழ் செய்கிறாய்  
இரக்கம் காட்டுவாய்  இவ்வுலகின்மீது  -
அல்லது பேராசைக்காரனாய் உலகின் பங்கினை
இடுகாட்டுடன் இணைந்து கவர்ந்து உண்ணுவாய்  .
 
---வில்லியம் ஷேக்ஸ்பியர்
' சொன்னெட்' எனும் 14 வரிக் கவிதை ' 
 
[தமிழ் வடிவம் ---சந்திர கலாதர் ]
வெள்ளி / ஐப்பசி / நண்பகல்
 

Sonnet 1
From fairest creatures we desire increase,
That thereby beauty's rose might never die,
But as the riper should by time decease,
His tender heir might bear his memory:
But thou, contracted to thine own bright eyes,
Feed'st thy light's flame with self-substantial fuel,
Making a famine where abundance lies,
Thy self thy foe, to thy sweet self too cruel.
Thou that art now the world's fresh ornament,
And only herald to the gaudy spring,
Within thine own bud buriest thy content,
And, tender churl, mak'st waste in niggarding.
    Pity the world, or else this glutton be,
    To eat the world's due, by the grave and thee.
–William Shakespeare

--